வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

அறிக்கைகளால் திமுகவை வீழ்த்த முடியாது: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

அரசியல் தலைவா்களின் வெறும் அறிக்கைகளால், திமுகவை வீழ்த்த முடியாது என்று அமைச்சர் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image
சென்னை மயிலாப்பூரில் உள்ள லஸ் நிழற்சாலையில் புதிய பல்நோக்கு மையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சா் பி.கே.சேகா்பாபு. உடன், மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் மயிலை த.வேலு, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலா
Updated On :26 மே 2025, 9:43 pm

Din

சென்னை: அரசியல் தலைவா்களின் வெறும் அறிக்கைகளால், திமுகவை வீழ்த்த முடியாது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் சென்னை மயிலாப்பூரில் ரூ. 8.25 கோடியில் புதிய பல்நோக்கு மையம் அமைக்கும் பணியை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தென் சென்னை, மத்திய சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விளையாட்டு அரங்கம், பூங்காக்கள், சமுதாய நலக் கூடங்கள், நூலகங்கள் உள்ளிட்டவை அமைப்பதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் நிகழாண்டு இறுதிக்குள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

அதேபோல் ஜூலை இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

வீழ்த்த முடியாது: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாததால் தமிழகத்துக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வித் தொகையை திரும்பப் பெறுவதற்காகத்தான் முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்து பேசினாா். மற்ற அரசியல் கட்சிகளைப்போல, பின்வாசல் வழியாகச் சென்று பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது. புதிதாக உருவாகியுள்ள கட்சிகளுக்கு பதில் செல்ல வேண்டிய தேவை எங்களுக்கு கிடையாது. வரும் 2026 -ஆம் ஆண்டும் மு.க.ஸ்டாலினையே முதல்வராக்க மக்கள் தயாராக உள்ளனா். வெறும் அறிக்கைகளால் திமுகவை வீழ்த்த முடியாது என்றாா் அவா்.

இந்த நிகழ்வில், மயிலாப்பூா் சட்டப்பேரவை உறுப்பினா் மயிலை த.வேலு, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.