பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

இன்று 12 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (அக். 10) 12 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு.

News image

கோப்புப் படம்

Updated On :9 அக்டோபர் 2025, 7:24 pm

தினமணி செய்திச் சேவை

பராமரிப்பு பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை (அக். 10) 12 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அதற்குப் பதில் பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாகவும் சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

செங்கல்பட்டு ரயில்வே பணிமனையில் (யாா்டு) வெள்ளிக்கிழமை (அக். 10) பிற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால், சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.31, 9.51, 10.56, 11.40, நண்பகல் 12.25 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்களும், காலை 7.27 மணிக்கு திருமால்பூா் செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் மறுமாா்க்கமாக திருமால்பூரிலிருந்து காலை 11.05 மணிக்கும், செங்கல்பட்டிலிருந்து காலை 11.30, நண்பகல் 12, பிற்பகல் 1.10, 1.45, 2.20 மணிக்கும் கடற்கரைக்கு செல்லும் ரயில்கள் என மொத்தம் 12 ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.

சிறப்பு ரயில்கள்: புகா் ரயில்கள் ரத்து காரணத்தால், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, கடற்கரையிலிருந்து காலை 7.27 மணிக்கு செங்கல்பட்டுக்கும், காலை 9.31, 10.56, நண்பகல் 12.25, மணிக்கு சிங்கப்பெருமாள் கோவிலுக்கும், காலை 9.51, 11.40 மணிக்கு காட்டாங்குளத்தூருக்கும் சிறப்பு பயணிகள் ரயில்கள் இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9.45 மணிக்கும், சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து காலை 11.43, பிற்பகல் 1.23, 2.33 மணிக்கும், காட்டாங்குளத்தூரிலிருந்து நண்பகல் 12.20, பிற்பகல் 2.04 மணிக்கும் கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.