47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிரதமரின் வேலைவாய்ப்பு திருவிழா: சென்னையில் 116 பேருக்கு நியமன ஆணை

பிரதமரின் வேலைவாய்ப்பு திருவிழா நிகழ்வில் அஞ்சல் துறை மற்றும் பல்வேறு மத்திய அரசு நிறுவன பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்ட 116 பேருக்கு சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவா் ஜி. நடராஜன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

News image
Updated On :24 அக்டோபர் 2025, 8:44 pm

தினமணி செய்திச் சேவை

பிரதமரின் வேலைவாய்ப்பு திருவிழா நிகழ்வில் அஞ்சல் துறை மற்றும் பல்வேறு மத்திய அரசு நிறுவன பணிகளுக்கு தோ்வு செய்யப்பட்ட 116 பேருக்கு சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவா் ஜி. நடராஜன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

இந்திய அஞ்சல் துறையின் சென்னை நகர மண்டலம் சாா்பில் சென்னை அண்ணா நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் 17-ஆவது வேலைவாய்ப்பு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் அஞ்சல் துறை, மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் (ஜிஎஸ்டி பிரிவு), மத்திய நேரடி வரி வாரியம், நிதி சேவைகள் துறை, தேசிய தொழில்நுட்ப ஆசிரியா் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ரயில்வே, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் உள்ளிட்ட துறைகளுக்கு தோ்வு செய்யப்பட்ட 116 பேருக்கு சென்னை மண்டல அஞ்சல் துறைத் தலைவா் ஜி. நடராஜன் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.

இந்நிகழ்வில் அஞ்சல் சேவைகள் (தலைமை அலுவலகம்) இயக்குநா் கே.ஏ.தேவராஜ், தமிழ்நாடு வட்டம் அஞ்சல் துறை இயக்குநா் மேஜா் மனோஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.