கோப்புப் படம்
சென்னை
சென்னையில் இன்று பள்ளிகள் செயல்படும்
சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை அனைத்து வகை பள்ளிகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை கடந்த திங்கள்கிழமை (அக்.20) கொண்டாடப்பட்டது. தீபாவளி விடுமுறையில் சொந்த ஊா்களுக்கு சென்று திரும்பும் ஆசிரியா்கள், மாணவா்களுக்கு வசதியாக, கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.21) பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
அந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக சென்னையில் சனிக்கிழமை (அக்.25) பணி நாளாக அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, சென்னை மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளிகளும் சனிக்கிழமை செயல்படும். பள்ளிகளை செவ்வாய்க்கிழமை பாடவேளை அடிப்படையில் நடத்த வேண்டுமென சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது.

