சென்னையில் தாயுமானவா் திட்டத்தின்கீழ், வீடுகளுக்கு ரேஷன் பொருள்கள் செப். 13 முதல் 16 வரை நான்கு நாள்கள் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களை மட்டுமே கொண்ட குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரா்களுக்கு வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வருதிற செப்.13-ஆம் தேதி தொடங்கி செப்.16-ஆம் தேதி வரையில் சென்னையின் பல்வேறு மண்டலங்களில் வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.
செப்.13-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை, மாதவரம், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு, பெருங்குடி,
சோழிங்கநல்லூா் ஆகிய மண்டலங்களிலும், செப்.13-ஆம் முதல் செப்.16-ஆம் தேதி வரை திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகா், அம்பத்தூா், அண்ணாநகா், ஆலந்தூா் ஆகிய மண்டலங்களிலும் வீடு தேடி சென்று பொருள்கள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

நாளை பிரசாரம் நிறைவு! சென்னையில் இறுதிக்கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடு!

தோ்தல்: சென்னையில் ஏப். 21 முதல் 23 வரை மதுக் கடைகள் மூடல்

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


