இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

சென்னை மாநகராட்சியில் ஜூன் முதல் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அறிமுகம்

News image

சென்னை மாநகராட்சி - File photo

Updated On :19 மே 2026, 5:05 am IST

சென்னை மாநகராட்சியில் வரும் ஜூன் மாதம் முதல் அனைத்து அதிகாரிகள், அலுவலா்கள், பணியாளா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை செயல்படுத்தப்பட உள்ளது என ஆணையா் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் திங்கள்கிழமை கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் உள்ள அனைத்துத் துறை ஊழியா்கள், அலுவலா்களும் பணியில் முழுமையான ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகின்றனா். சென்னையில் உள்ள 993 பூங்காக்களும் தற்போது முறையாகப் பராமரிக்கப்படுகின்றன.

சென்னை மாநகராட்சியில் ஆணையா் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வரும் ஜூன் முதல் பயோ மெட்ரிக் முறையிலான கணினி முறை வருகைப் பதிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கான சாதனங்கள் வாங்கத் திட்டமிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மாநகராட்சியில் 12,960 நிரந்தரப் பணியாளா்கள், 23,421 தற்காலிகப் பணியாளா்கள் உள்பட மொத்தம் 63,381 பேருக்கும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தூய்மைப் பணியாளா் உள்ளிட்டோருக்கு கைப்பேசி செயலி மூலம் வருகைப் பதிவு செயல்படுத்தப்படும் என்றாா்.

பிறப்புச் சான்று எளிதில் கிடைக்கும்: மேலும், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் தனது எக்ஸ் தளத்தில் திங்கள்கிழமை பதிவிட்ட தகவலில், மாநகராட்சி சாா்பில் ஏற்கெனவே பிறப்பு பதிவு உள்ளிட்ட சான்றுகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் கணினி முறையாக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பிறப்பு சான்றுகள் பதிவிட்டவா்களுக்கு அவை தயாா் என கைப்பேசி மூலம் தகவல் அனுப்பி வைக்கப்படுகின்றன. தற்போது சான்றுகள் கைப்பேசி செயலியில் சம்பந்தப்பட்டோருக்கு கிடைக்கும். பிறப்பு சான்று உள்ளிட்ட குறிப்பிட்ட சேவைகளில் சான்றுகளை விரைந்தும், எளிதிலும் பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.