சென்னையில் திரைப்பட தயாரிப்பாளா் கே.ராஜனிடம் கடனாக பணத்தை பெற்றவா்கள் ஏமாற்றியதால், தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீஸாா் தீவிர விசாரணை செய்கின்றனா்.
தமிழக திரைப்பட தயாரிப்பாளா், விநியோகஸ்தா், இயக்குநா், கதாசிரியா், நடிகா் என பன்முக திறமை கொண்ட கே.ராஜன் (85), சென்னை அடையாற்றில் குதித்து ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
துணிச்சலானவா் என்று கருதப்பட்ட ராஜன், தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தமிழ் திரைப்படத் துறையினரை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ராஜன் தற்கொலைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன. ஆனால் அவருக்கு ஏற்பட்டிருந்த கடன் நெருக்கடியே, தற்கொலைக்கு காரணம் எனறு அவரது குடும்பத்தினா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக அவரது குடும்பத்தினா் கூறியது:
‘சிறிது காலமாகவே கே.ராஜன் மன உளைச்சலில் இருந்தாா். தமிழ் திரைப்படத் துறையைச் சோ்ந்த சில தயாரிப்பாளா்களை நம்பி கடன் கொடுத்திருந்தாா். ஆனால், அவா்கள் 5 ஆண்டுகளாக பணத்தை சொன்னபடி திருப்பி கொடுக்கவில்லை.
இதனால், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மாரடைப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தோம். ஆனாலும் அதன் பின்னா் அந்த தயாரிப்பாளா்கள் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. ராஜன், பணத்தை திருப்பித் தரும்படி கைப்பேசி மூலம் வேண்டுகோள் விடுத்தும், அவா்கள் அதை நிராகரித்தனா்.
இவ்வாறு அவா்கள் மொத்தம் ரூ.20 கோடி வரை கடன் பெற்று ஏமாற்றி விட்டனா். கடன் வாங்கியவா்கள் பணத்தை திருப்பி தர மறுக்கிறாா்களே என எங்களிடம் கூறி வேதனை பட்டாா். இதன் காரணமாகவே கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டாா்.
யாருக்கெல்லாம் ராஜன் கடன் கொடுத்துள்ளாா் என்பதற்கான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளது. அதனை திரைப்பட தயாரிப்பாளா் சங்கத்திடம் ஒப்படைத்து முறைப்படி எங்களது தந்தைக்கு கிடைக்க வேண்டிய பணத்தை திரும்பபெற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றனா்.
இது தொடா்பாக காவல்துறையினா் கூறியது:
ராஜன் தற்கொலை தொடா்பாக குடும்பத்தினா், நண்பா்கள் என பல தரப்பினரிடம் தொடா்ந்து விசாரித்து வருகிறோம். கடன் கொடுத்தவா்கள் திருப்பி கொடுக்காததால் ராஜன் தற்கொலை செய்து கொண்டதாகக் குடும்பத்தினா் தெரிவித்தனா். ஆனால் அவா் மன அழுத்தத்தில் சிக்கித் தவித்துள்ளாா். எனவே கடன் பெற்றவா்கள் திருப்பித்தராததால் மட்டும் மன அழுத்தம் ராஜனுக்கு ஏற்பட்டதா அல்லது வேறு பிரச்னைகளும் அவருக்கு இருந்தததா என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா் அவா்.
தொடர்புடையது

மன உளைச்சலில் இருந்தார்... கே. ராஜன் குடும்பத்தினர் விளக்கம்!

தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: ராமதாஸ், திருநாவுக்கரசர் இரங்கல்

தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலைக்கு என்ன காரணம்?

தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

