முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மன உளைச்சலில் இருந்தார்... கே. ராஜன் குடும்பத்தினர் விளக்கம்!

கே. ராஜன் மறைவு குறித்து குடும்பத்தினர் விளக்கம்...

News image

கே. ராஜன்

Updated On :18 மே 2026, 4:52 pm IST

தயாரிப்பாளர் கே. ராஜன் தற்கொலை குறித்து குடும்பத்தினர் விளக்கமளித்துள்ளனர்.

பல ஆண்டுகளாகத் திரைத்துறையில் இயங்கி வந்த தயாரிப்பாளர் கே. ராஜன் நேற்று (மே 17) சென்னை அடையாறு கூவத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடன் தொல்லையால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக சில தகவல்கள் வெளியாகின. குடும்ப பிரச்னை காரணம் என்றும் கூறப்பட்டன.

இந்த நிலையில், கே. ராஜனின் மகன்கள், மகள் ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் எனக் கோரிக்கை வைத்ததுடன், “எங்கள் அப்பா கே. ராஜன் ஏழ்மையிலிருந்து உயர்ந்த இடத்திற்கு வந்தவர். தன் கனவுகளை நனவாக்கியவர். அவர் குறித்து உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? தெரியாமல் தவறான கருத்துகளைப் பரப்பாதீர்கள்.

எங்கள் அப்பா சில தயாரிப்பாளர்களுக்குக் கடன் கொடுத்திருந்தார். அது எதுவும் திரும்பி வராததால் கடும் மன உளைச்சலில் இருந்தார். தயாரிப்பாளர்கள் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு எங்களின் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

Producer K. Rajan's family has issued a clarification regarding his suicide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.