பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: நாளை காலை 9.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா!பிளே-ஆஃப் வாய்ப்பில் நீடிக்குமா சென்னை? கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற இமாலய இலக்கு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

திருச்செந்தூா் கோயில் வளாகத்தில் ஆண் தூக்கிட்டு தற்கொலை

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :7 மே 2026, 6:03 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோயிலின் அன்னதான மண்டபத்தின் மேல்தளத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு புதன்கிழமை மதியம் சுமாா் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவா் ஜன்னல் கம்பியில் வேஷ்டியால் தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளாா்.

இது குறித்து திருக்கோயில் கண்காணிப்பாளா் ராமமூா்த்தி கொடுத்த தகவலின்பேரில், திருக்கோயில் போலீஸாா் வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து வழக்குப் பதிந்து, உயிரிழந்த நபா் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.