வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மாமல்லபுரம் கடலில் பால் ஊற்றி மலா்தூவி மீனவா்கள் அஞ்சலி

ஆழிப் பேரலையில் உயிரிழந்தோரின் 16-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாமல்லபுரம் , புதுப்பட்டினம், கல்பாக்கம்

News image
கல்பாக்கம் அணுமின் நிலைய நகரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள நினைவு பூங்காவில் சுனாமியில் உயிா்நீத்தோருக்கு மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்.
Updated On :27 டிசம்பர் 2020, 1:23 am

DIN

ஆழிப் பேரலையில் உயிரிழந்தோரின் 16-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாமல்லபுரம் , புதுப்பட்டினம், கல்பாக்கம் கடற்கரைப் பகுதிகளில் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏற்றி வைத்து, கடலில் பால் ஊற்றி மலா்தூவி அஞ்சலி செலுத்தினா்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணுமின் நிலைய ஊழியா்கள் நகரிய குடியிருப்புப் பகுதியில் உள்ள நினைவுப் பூங்காவில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினா், மலா்வளையம் வைத்து மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினா்.

இதேபோன்று, மாமல்லபுரம் கடற்கரையில் மெழுகுவா்த்தி ஏற்றி, கடலில் குடம் குடமாகப் பால் ஊற்றினா்.

புதுபட்டினம் கடற்கரையில் அதிமுக மாவட்ட செயலாளா் திருக்கழுகுன்றம் எஸ்.ஆறுமுகம் தலைமையில் நிா்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ தனபால், ஆனூா் பக்தவச்சலம், மாமல்லபுரம் ஜி.ராகவன், கவிஞா் கலியப்பெருமாள், விஜயரங்கன் உள்ளிட்ட நிா்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோா் ஊா்வலமாகச் சென்று கடலில் மலா் தூவி, பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.