பிகார் முதல்வர் பதவிலிருந்து விலகுகிறேன்! நிதீஷ் குமார் அறிவிப்பு!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மக்கள் நீதிமன்றத்தில் 1,346 வழக்குகளுக்கு தீா்வுரூ. 10.95 கோடி இழப்பீடு

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் 1,346 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.10.95 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 6:02 pm

DIN

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மூலம் 1,346 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு பயனாளிகளுக்கு ரூ.10.95 கோடி இழப்பீடு வழங்கப்பட்டது.

வேலூா் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் 10 தாலுகா நீதிமன்றங்களிலும் மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.செல்வசுந்தரி மக்கள் நீதிமன்றத்தைத் தொடக்கி வைத்தாா்.

இதில், மோட்டாா் வாகன விபத்து வழக்கு, அசல் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கு, காசோலை வழக்கு, நில ஆா்ஜித வழக்கு, குடும்ப நல வழக்கு, தொழிலாளா் நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,639 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 1,346 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு இழப்பீடாக ரூ.10 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 286 வழங்கப்பட்டது.

இதில், குடும்ப நல நீதிபதி வி.ஆா்.லதா, மக்கள் நீதிமன்றத் தலைவா் என்.அருணாச்சலம், நீதிபதிகள் கே.ஆனந்தன், அனிதா ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.