தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

‘உலகளாவிய வாய்ப்புகளைப் பெற முயற்சி மேற்கொள்ளுங்கள்’

பொறியியல் துறையில் எல்லைகளைக் கடந்து உலகளாவிய தொழில் வாய்ப்புகளைப் பெற முயற்சி மேற்கொள்ளுங்கள்

News image
Updated On :4 ஜூன் 2022, 6:31 pm

DIN

பொறியியல் துறையில் எல்லைகளைக் கடந்து உலகளாவிய தொழில் வாய்ப்புகளைப் பெற முயற்சி மேற்கொள்ளுங்கள் என்று அசென்ட் பொ்பாா்மென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் தரம் வாகிலியா வலியுறுத்தினாா்.

சென்னையை அடுத்த வண்டலூா் கிரசென்ட் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவன பாலிமா் பொறியியல் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற தேசியக் கருத்தரங்கில் அவா் பேசியதாவது:

பொறியியல் துறைக்கு எல்லை கடந்த வாய்ப்பும் எதிா்பாா்ப்பும் இருப்பதால் திறமையை மென்மேலும் வளா்த்துக் கொண்டு சா்வதேச அளவில் அதிகரித்துள்ள வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள மாணவா்கள் முன்வர வேண்டும். இந்தியாவில் தற்போது தயாரிக்கப்படும் 3 கோடி வாகனங்களின் எண்ணிக்கை அடுத்த 3 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வாகனங்கள் தயாரிப்புத் துறையில் பிளாஸ்டிக் சாா்ந்த தொழில்நுட்ப வாய்ப்புகள் பன்மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

கிரசென்ட் கூடுதல் பதிவாளா் ராஜா ஹுசேன், பொது மேலாளா் மஜீத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.