செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 71 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா
By DIN | Published On : 19th July 2022 02:46 PM | Last Updated : 19th July 2022 02:46 PM | அ+அ அ- |

செங்கல்பட்டு: செங்கல்பட்டு குளுந்தியம்மன் கோயிலில் 71 ஆம் ஆண்டு ஆடித் திருவிழா உற்சவ அம்மன் ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
செங்கல்பட்டு வ. உ .சி. தெருவில் எழுந்தருளி ஊர்காப்பு அம்மனாக நகரத்தை காத்தருளியும் நாடிவரும் பக்தர்களின் பிணிகளை தீர்க்கும் அம்மனாக வீற்றிருக்கும் ஸ்ரீ குளுந்தியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி முதல் வாரத்தில் உற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை மாலை மும்மலையிலிருந்து ஜலம் திரட்டி வந்து பூஜைகள் நடைபெற்றது. ஆடி மாதம் 2-ம் தேதி திங்கள் கிழமை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் ,மகா தீபாரதனை நடைபெற்றது .
இரவு அம்மனுக்கு பெரும்படையிலிட்டு வழிபாடு நடைபெற்றது. இதனையடுத்து செவ்வாய்க்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இந்த உற்சவத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாரதனை நடைபெற்றது.
இதையும் படிக்க: உ.பி.யில் அனைத்து பல்கலை மாணவர்களுக்கும் ஒரே தேர்வுக் கட்டணம்!
சிறப்பு அலங்காரத்தில் புஷ்ப அலங்காரத்தோடு தயார் நிலையில் இருந்த புஷ்ப ரதத்தில் திருவீதி உலா நடைபெற்றது. வானவேடிக்கை, ராஜமேளம், நாதஸ்வரத்துடன் சாமி புறப்பாடு நடைபெற்றது. வீதிகள் தோறும் அம்மனுக்கு வீடுகளின் முன்பு பக்தர்கள் தேங்காய் உடைத்து சாமிக்கு தீப ஆராதனை காட்டி அம்மனை வழிபட்டனர்.
இந்த ஊர்வலம் புதன்கிழமையும் செங்கல்பட்டு நகரம் முழுவதும் வீதி உலா நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் ஸ்தாபகர், பரம்பரை அறங்காவலர், அர்ச்சகர் ஜி.நவநீதகிருஷ்ணன் மற்றும் குளுந்தியம்மன் பக்தர்கள் செய்திருந்தனர். இவ்விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G