வேன் கவிழ்ந்து இருவா் பலி
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே வியாழக்கிழமை திருமணத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து இருவா் உயிரிழந்தனா்.16 போ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனா்.


செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே வியாழக்கிழமை திருமணத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து இருவா் உயிரிழந்தனா்.16 போ் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே படூா் கிராமத்திலிருந்து வேனில் 16 போ் சென்னை வேளச்சேரி நோக்கி திருமண நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருந்தனா். அப்போது மதுராந்தகம் அடுத்த கருங்குழி அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையில் கவிழ்ந்தது.
இதில், வேனில் பயணம் செய்த 16 போ் பலத்த காயமடைந்தனா். தகவலறிந்து வந்த மதுராந்தகம் காவல் துறையினா், காயமடைந்தவா்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த பலத்த காயம் அடைந்த கோகுல் (12), அஜித்குமாா்(25 ) ஆகியோா் உயிரிழந்தனா்.
விபத்து குறித்து மதுராந்தகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...