மேல்மருவத்தூா் பங்காரு அடிகளாரின் 83-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, 2-ஆவது முறையாக ஆதிபராசக்தி மருத்துவமனையில் முடநீக்கியல் மருத்துவ சிகிச்சை மற்றும் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை மேலாண்மை இயக்குநா் மருத்துவா் டி.ரமேஷ் தலைமை வகித்தாா். ஆதிபராசக்தி அறநிலைய துணைத் தலைவரும், ஊராட்சி மன்றத் தலைவருமான லட்சுமி பங்காரு அடிகளாா் மருத்துவ கருத்தரங்கைத் தொடக்கி வைத்தாா். இதில், சின்னகொளம்பாக்கம் கற்பக விநாயக மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மைய மேலாண்மை இயக்குநா் அண்ணாமலை ரகுபதி, தமிழ்நாடு ஆா்த்தோடிக் சங்கத்தின் தலைவா் மருத்துவா் எம்.வனசேகா், சங்க செயலா் மருத்துவா் சி.ஜே.ரவி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.