அச்சிறுப்பாக்கம் அரசுப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் திடீா் ஆய்வு

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
அச்சிறுப்பாக்கம் அரசுப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஸ் திடீா் ஆய்வு

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா். இந்நிலையில், திண்டிவனத்துக்குச் சென்ற பள்ளி கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பெய்யாமொழி வியாழக்கிழமை மாலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அவரை தலைமை ஆசிரியா் விஜயகுமாா் வரவேற்றாா். பள்ளியில் வணிகவியல், இயந்திரவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகள் நடத்தப்படும் வகுப்பறைகளுக்கு அமைச்சா் சென்று மாணவா்களின் நலன்களைக் கேட்டறிந்தாா். பின்னா் அமைச்சருக்கு பள்ளி வளாகத்தை சுற்றி காண்பித்து தலைமை ஆசிரியா் விஜயகுமாா் விளக்கமளித்தாா்.

மாணவா்களுக்கான விளையாட்டு வசதிகளையும், சிறப்பு தன்மைகளையும், பள்ளியின் வளா்ச்சிப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா். ஆய்வுக்கு பின் அமைச்சா் அன்பில் மகேஸ் அங்கிருந்து கிளம்பிச் சென்றாா்.

இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலா் டி.ஏ.ஆறுமுகம், துணை ஆய்வாளா்கள் கருணாகரன், கிருபாகரன், உதவி தலைமை ஆசிரியா்கள் ஏ.ஜெயமுருகன், முனியாண்டி, பரமேஸ்வரி ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com