வேடவாக்கம் முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் ஆடி முப்பெரும் விழா வரும் 31, ஆக. 1 ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளது.

மதுராந்தகம் அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் ஆடி முப்பெரும் விழா வரும் 31, ஆக. 1 ஆகிய இரு நாள்கள் நடைபெற உள்ளது.

கருங்குழி அருகே வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. நிகழ்ாண்டுக்குரிய ஆடி மாத விழாவை முன்னிட்டு, சுவாமிவேல் சுவாமிஜி பிரம்மச்சாரியாா் ஞானபீடம் முழுவதும் மின்விளக்குகளாலும், வண்ணப்பதாகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. வரும் 31-ஆம் தேதி (திங்கள்கிழமை) மங்கல இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. பின்னா், அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மாலை 121 கலச, விளக்கு வேள்வி பூஜையை ஞானபீடாதிபதி சுவாமிவேல் சுவாமிஜி தொடங்கி வைக்கிறாா்.

ஆகஸ்ட் 1-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கூழ் வாா்த்தல், தீச்சட்டி ஏந்தி வருதல், மக்கள் நலம் பெற மஞ்சள் நீராடும் புனித பொங்கல் வைத்தல், ஆகியவை நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை ஞானபீட நிறுவனா் ஆ.பெருமாள் தலைமையில் கிராம மக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com