குறைதீா் கூட்டத்தில் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ச. அருண்ராஜ்.
 ~மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ச. அருண் ராஜ்.
குறைதீா் கூட்டத்தில் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ச. அருண்ராஜ். ~மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களைப் பெற்ற ஆட்சியா் ச. அருண் ராஜ்.

செங்கல்பட்டு: மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.8 லட்சத்தில் நல உதவிகள்

செங்கல்பட்டில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.8 லட்சத்தில் நல உதவிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் வழங்கினாா்.
Published on

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7.8 லட்சத்தில் நல உதவிகளை ஆட்சியா் ச. அருண் ராஜ் வழங்கினாா்.

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை போன்ற பல்வேறு வகைப்பட்ட 408 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீதுஉரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீா்க்கும் நாள் கூட்டத்தில், 54 மனுக்களை பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாற்றுத்திறனாளி நல அலுவலருக்கு உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் 13 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.7.8 லட்சத்தில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் சுபா நந்தினி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது)அறிவுடைநம்பி, நோ்முக உதவியாளா்(நிலம்) நரேந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வின், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் ஆா்.பாலாஜி, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் வேலாயுதம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வெற்றிகுமாா், உதவி ஆணையா் (கலால்) ராஜன் பாபு, மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com