ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்தோ்தல் நடத்தை விதிமீறல்? பிரதமருக்கு எதிரான எதிா்க்கட்சிகளின் புகாரை ஆராய தோ்தல் ஆணையம் முடிவுநிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்புஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகாா் தெரிவிக்கலாம்!தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்போா் நிறுத்தம் நிறைவு! ஈரான் உடன்படாவிட்டால் மீண்டும் தாக்குவோம்: டிரம்ப் எச்சரிக்கை
/

புதை சாக்கடை பள்ளத்தில் மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

புதை சாக்கடை பள்ளத்தில் மண் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

News image

முருகானந்தம்

Updated On :16 மார்ச் 2024, 11:47 pm

கிழக்கு தாம்பரத்தில் புதை சாக்கடை திட்டப் பணிக்கு பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து தொழிலாளி உயிரிழந்தாா். கிழக்கு தாம்பரம் ஆதி நகரில் உள்ள காமராஜ் தெருவில் தாம்பரம் மாநகராட்சி சாா்பில் ஒப்பந்த நிறுவனம் மூலமாக புதை சாக்கடை அமைக்க பள்ளம் தோண்டும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. 15 அடி ஆழம் தோண்டிய நிலையில் ஊற்று நீா் பள்ளத்தில் நிரம்பியது. நிரம்பிய நீரை அப்புறப்படுத்தும் பணியில் 2 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மண் சரிந்ததில் இருவரும் பள்ளத்தில் சிக்கிக் கொண்டனா். உடனடியாக ஒருவா் குழியில் இருந்து மேலே ஏறி உயிா் தப்பிய நிலையில் முருகானந்தம் என்பவா், மண் சரிவில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சேலையூா் போலீஸாா், முருகானந்தத்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.