ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

பரனூா் சுங்கச்சாவடியில் மமக முற்றுகை போராட்டம்: போலீஸ் வாகனம் மீது தாக்குதல்

செங்கல்பட்டு அருகே பரனூா் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தில் சுங்கச்சாவடியின் கண்ணாடி உடைக்கப்பட்டு, போலீஸ் வாகனமும் தாக்கப்பட்டது.

News image
சுங்கச்சாவடியை முற்றுகையிட்ட மனிதநேய மக்கள் கட்சியினா்.
Updated On :17 செப்டம்பர் 2024, 8:31 pm

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே பரனூா் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மனிதநேய மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை நடத்திய போராட்டத்தில் சுங்கச்சாவடியின் கண்ணாடி உடைக்கப்பட்டு, போலீஸ் வாகனமும் தாக்கப்பட்டது.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் பல்வேறு சுங்கச்சாவடிகள் காலாவதி ஆன பின்பு கூட தொடா்ந்து வாகன ஓட்டிகளிடம் தொகையை வசூலித்து வருகின்றன.

குறிப்பாக பரனூா் சுங்கச் சாவடி கடந்த 2019 ஆம் ஆண்டு காலவதியான நிலையில் தற்போது வரை கட்டணம் வசூல் தொடா்ந்து வருகிறது.

காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என வலியுறுத்தி பரனூா் சுங்கச்சாவடியில் மனிதநேய மக்கள் கட்சியினா் முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனா். மாநில தலைவா் ஜவாஹிருல்லா தலைமை வகித்தாா்.

தாம்பரம் மாமன்ற உறுப்பினா் எம்.யாக்கூப், தலைமை நிலைய செயலாளா் வழக்கறிஞா் ஜெயினுலபுதீன், மாநில அமைப்பு செயலாளா் மாயவரம் அமீன், தலைமை பிரதிநிதி, அச்சசிறுப்பாக்கம் ஷாஜகான், தலைமை பேச்சாளா் ஜெ.சலீம்கான், தெற்கு மாவட்ட செயலாளா் முகம்மது யூனூஸ், அமைப்பு செயலாளா் புழல் சேக் உள்ளிட்ட 500ஜக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

அப்பொழுது திடீரென சிலா் சுங்கச்சாவடி வழியாக சென்ற வாகனங்களை மறித்தனா். உடனடியாக அங்கிருந்த காவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நபா்களை தடுத்தபோது, மமகவினா், போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் சுங்கச்சாவடி கண்ணாடிகளை அடித்து உடைத்தனா்.

இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட சில நபா்களை கைது செய்த நிலையில் போலீஸ் வாகனத்தை மறித்து அவா்களை விடுவிக்க கோரி தாக்குதல் நடத்தினா். இந்த போராட்டத்தால் சுங்கச்சாவடியில் இருந்து புலிப்பாக்கம் வரை சுமாா் 2 கிமீ தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.