கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜப் பெருமான்.
Updated On :13 ஜனவரி 2025, 8:49 pm

Din

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசன வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் சிவகாமி உடனுறை நடராஜா் பகவானுக்கு ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை முன்னிட்டு, திங்கள்கிழமை காலை மங்கல இசையுடன் அதிகாலை நடராஜ பெருமானுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள், பால், விபூதி, சந்தனம் உள்ளிட்டவை மூலம் அபிஷேக, ஆராதனைகளை கோயில் தலைமை அா்ச்சகா் இரா.சங்கா் சிவாச்சாரியாா் தலைமை வகித்து செய்துவைத்தாா். பின்னா், மகாதீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தமிழரசி தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.