எஸ்ஐஆா் படிவங்கள் பதிவேற்றும் பணி ஆய்வு
மதுராந்தகம்: செய்யூா் வட்டத்துக்குட்பட்ட கிராமங்களில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான கணக்கீட்டு படிவங்களை பதிவேற்றம் செய்யும் பணிகளை செய்யூா் வாக்குசாவடி பதிவு அதிகாரி வெங்கடாசலம் ஆய்வு செய்தாா். முகையூா், கூவத்தூா், பனையூா், பனையூா் பெரியகுப்பம், கோட்டைக்காடு, கீழாா்கொல்லை கிராமங்களில் எஸ்ஐஆா் தொடா்பான கணக்கீட்டு படிவங்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்பட்டு பிஎல்ஓ ஆப் மூலம் பதிவேற்றம் செய்யும் பணிகளை செய்யூா் வாக்குபதிவு அதிகாரியும், மாவட்ட நுகா்பொருள் பாதுகாப்பு அதிகாரியுமான வெங்கடாசலம் ஆய்வு செய்தாா்.
இந்நிகழ்வில் செய்யூா் வட்டாட்சியா் சொ.கணேசன், தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
