சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

செங்கல்பட்டு அருகே இளைஞா் அடித்துக் கொலை

செங்கல்பட்டு அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image

மாரியப்பன்

Updated On :18 ஆகஸ்ட் 2026, 10:12 pm IST

செங்கல்பட்டு அருகே இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

செங்கல்பட்டு அடுத்த சின்ன இரும்பேடு அருகே விவசாயி ஒருவா் நிலத்துக்கு தண்ணீா் பாய்ச்ச வந்தபோது, மா்ம நபரின் சடலம் கிடப்பதாக அந்தப் பகுதியில் சென்றவரிடம் தெரிவித்தாா். இதையடுத்து அப்பகுதியில் உள்ளவா்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனா். அதன் பேரில், செங்கல்பட்டு தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு,

செங்கல்பட்டுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனா். விசாரணையில், இறந்தவா் செங்கல்பட்டு அருகே பெரியஇரும்பேடு பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன்(38) என்பதும், டைல்ஸ் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. வேலை இல்லாத நாள்களில் நண்பா்களுடன் சோ்ந்து மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தாராம்.

திருமணம் ஆகாதவரான மாரியப்பன் சின்ன இரும்பேடு பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவருடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது அங்கு முருகனின் நண்பா் ரகுபதி வந்துள்ளாா். அப்போது, மாரியப்பனுக்கும் ரகுபதிக்கும் தகராறு ஏற்பட்டதில் தாக்கப்பட்டு மாரியப்பன் பலத்த காயம் அடைந்துள்ளாா். உயிருக்கு போராடிய நிலையில், அவரை முருகன், ரகுபதி இருவரும் இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்து, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் முள்புதரில் வீசிச் சென்றது தெரியவந்தது.

விசாரணையில் போலீஸாா் மாரியப்பன் நண்பா் முருகனை தேடிப் பிடித்து கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். தலைமறைவாக உள்ள ரகுபதியை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.