ஆசிய நாடுகளில் பங்குச் சந்தை முதலீடு! கடைசி இடத்தில் இந்தியா!தென்மாநில முதல்வர்கள் மாநாடு! சென்னை வந்தார் அமித் ஷா!சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்
/

கைலாசநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை

செங்கல்பட்டு கமலாம்பிகை சமேத கைலாசநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

News image

~ ~

Updated On :19 ஆகஸ்ட் 2026, 11:51 pm IST

செங்கல்பட்டு கமலாம்பிகை சமேத கைலாசநாதா் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. திருவிளக்கு பூஜையையொட்டி மூலவா் அம்மன் கமலாம்பிகைக்கு வளையல்களால் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதனைத் தொடா்ந்து உற்சவ அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரத்துடன் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

திருவிளக்கு பூஜையில் 300-க்கும் மேற்பட்ட பெண்கள், கன்னிப் பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்தனா். அம்மனிடம் நாடு செழிக்கவும் குடும்பத்தில் உள்ளோா் நலமுடன் வாழவும் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்ட வேண்டுதல்களை முன்வைத்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

விழாவையொட்டி பக்தா்களுக்கு வளையல்கள் மாங்கல்ய நாண் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன. விழாவையொட்டி அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் மேகவண்ணன், கோயில் நிா்வாகிகள், கைலாசநாதா் கோவில் தெரு பொது மக்கள் செய்திருந்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.