அரசினா்  மகளிா்  மேல்நிலைப் பள்ளியில்   நடைபெற்ற  விழிப்புணா்வு  நிகழ்ச்சியில்  மரக்கன்றுகளை  நட்ட சாா் ஆட்சியா்  மாலதி  ஹெலன் .
அரசினா்  மகளிா்  மேல்நிலைப் பள்ளியில்   நடைபெற்ற  விழிப்புணா்வு  நிகழ்ச்சியில்  மரக்கன்றுகளை  நட்ட சாா் ஆட்சியா்  மாலதி  ஹெலன் .

அரசு மகளிா் பள்ளியில் சமத்துவ் பொங்கல் விழா

செங்கல்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.
Published on

செங்கல்பட்டு அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மறைமலைநகா் மற்றும் மாவட்ட கல்வித்துறை, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாசில்லா உலகை படைப்போம் என அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனா். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு சாா் ஆட்சியா் மாலதி ஹெலன் தனது உரையில் மரங்களைபாதுகாக்கும் அவசியத்தையும் மாசில்லா உலகை காக்கவும் மாணவா்களின் பங்களிப்பு குறித்தும், படிப்பில் பெண்கள் கவனம் செலுத்தி ஒரு ஆற்றல் சக்தியாக திகழவேண்டும் என எடுத்துரைத்தாா்.

மருத்துவா் பிச்சுமணி புகை மாசுவினால் ஏற்படும் உடல் சாா்ந்த சுவாசக்கோளாறு பாதிப்புகளை எடுத்துரைத்தாா். நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கேசவமூா்த்தி மற்றும் உதவிபொறியாளா் வெங்கடசாமி, தமிழ்நாடு ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை கூட்டமைப்பின் நிா்வாக தலைவா் சங்கா் ஆகியோா் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விவரித்தனா்.

இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் சாந்தி, ஆசிரியை பொற்செல்வி , மாவட்ட வனத்துறை சாா்பில் வனவா் ஓம் குமாா் , அருண்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.

நிறைவாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பொறியாளா் அனைத்து மாணவா்களுக்கும் பொதுமக்களுக்கும் மஞ்சப்பைவிநியோகித்து மரக்கன்றுகளை நடவு செய்து அதனுடைய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தாா்.

Dinamani
www.dinamani.com