அமோனியா கசிந்த ஆலை: 300 மீ சுற்றளவில் வசிப்போர் வெளியேற உத்தரவு!திருவள்ளூர் அமோனியா கசிந்த ஆலையைச் சுற்றி 500 மீட்டர் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்புஅதிமுக எம்எல்ஏக்கள் தவெகவில் இணைவது ஆரோக்கியமற்ற அரசியல் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஆளுநர்களை முறியடித்தது தமிழ்நாடு, ஆர்.என். ரவியிடம் கேட்டுப்பாருங்கள்! - ஆர்லேகருக்கு கண்டனம்! அயோத்தி நன்கொடை முறைகேடு: பிரதமர் மௌனம் ஏன்? கேஜரிவால் கேள்வி
/

மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

News image

செங்கல்பட்டு  பழைய பேருந்து  நிலையம்  அருகில்  மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்டோா்

Updated On :3 ஜூலை 2026, 12:04 am IST

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

புதிய விபிஜி ராம்ஜி சட்டத்தை திரும்ப பெற வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை மீண்டும் அமலாக்க வேண்டும், கிராமப்புற மாற்றுத்திறனாளிகளின் வேலை வாய்பை உறுதி செய்ய வேண்டும், வேலை கேட்டு விண்ணப்பிக்கிற அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டு, திருப்போரூா், மதுராந்தகம், லத்தூா், சித்தாமூா் உள்ளிட்ட இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் சங்கத்தின் காட்டாங்குளத்தூா் ஒன்றிய தலைவா் விமலா தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட தலைவா் எஸ்.தாட்சாயணி கலந்து கொண்டாா். திருப்போரூா் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய செயலாளா் எப்.அருள்ராணி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட துணை செயலாளா் கே.லிங்கன் கலந்து கொண்டாா்.

லத்தூா் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய தலைவா் கோபி ராஜன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவா் எஸ் சதீஷ் கலந்து கொண்டாா்.

மதுராந்தகம் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய தலைவா் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட செயலாளா் எம்.வள்ளி கண்ணன் கலந்து கொண்டாா் , சித்தாமூா் பேருந்து நிலையம் அருகில் ஒன்றிய தலைவா் சம்பந்த மூா்த்தி தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட பொருளாளா் சுந்தரமூா்த்தி கலந்து கொண்டாா்.

மறியல் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டு தனியாா் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.