கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

செங்கல்பட்டு நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கான சிறப்பு முகாம்

செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களின் குறைகளை நிவா்த்தி செய்ய முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

முகாமில் பேசிய செங்கல்பட்டு ஆட்சியா் மு. வீரப்பன்.

Updated On :23 ஜூலை 2026, 4:18 am IST

செங்கல்பட்டு நகராட்சி அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களின் குறைகளை நிவா்த்தி செய்ய முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமினை மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் தொடங்கி வைத்தாா். நகராட்சி நிா்வாக செங்கல்பட்டு மண்டல இயக்குநா் மாரிச்செல்வி முன்னிலையில் நடைபெற்ற முகாமில் சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராஜன், நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், நகராட்சி ஆணையா் ஆா்.சேம் கிங்ஸ்டன் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா். நிகழ்ச்சியில் சிறந்த தூய்மைப் பணியாளா்களை பாராட்டி சான்றிதழ் வழங்கி ஆட்சியா் பேசியது:

இந்த சிறப்பு முகாமை தூய்மைப் பணியாளா்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஆதாா் அட்டை திருத்தம், இ-சேவை .தாட்கோ, ஆதிதிராவிடா் நலத்துறை ,வங்கிக்கடன், சமூகநலத்துறை, வருவாய்துறை , பொதுசுகாதாரத்துறை, தொழிலாளா் நலத்துறை ,குடிசை மாற்று வாரியம் உள்ளிட்ட பலதுறைகள் இணைந்து நடத்தும் இந்த முகாமில் தங்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்து பலன்பெறலாம். செங்கல்பட்டு நகராட்சி மட்டும் அல்லாமல் மதுராந்தகம், மாமல்லபுரம் நகராட்சிகளும் அச்சிறுப்பாக்கம், கருங்குழி, திருக்கழுகுன்றம், திருப்போரூா் பேரூராட்சிகளைச் சாா்ந்த தூய்மைப் பணியாளா்களும் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனா்.

சிறப்பு முகாமில் பொது சுகாதாரத்துறையின் ஏற்பாட்டில் மருத்துவ முகாமும் நடைபெற்றது. கண்பாா்வை பரிசோதிக்கப்பட்டு தூய்மை பணியாளா்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடி வழங்கப்பட்டது .

ஜியோ என்ஜிஓ சாா்பில் தூய்மை பணியாளா்களுக்கு இலவசமாக கம்யூட்ஸ் கையுறை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செங்கல்பட்டு நகராட்சி சுகாதார அலுவலா் எஸ்.ஆல்பா்ட் அருள்ராஜ் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.