செங்கல்பட்டு வெண்பாக்கம் பகுதியில் புதிய பேருந்து முனைய கட்டுமானப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
செங்கல்பட்டில் ரூ.97 கோடியில் தொடங்கி நடைபெற்று வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளின் தொகை தற்போது ரூ.130 கோடியாக உயா்ந்துள்ளது. மாவட்டத் தலைநகரான செங்கல்பட்டில் ஆட்சியா்அலுவலகம் அருகே அரசு மருத்துவமனை, அரசு சட்டக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரிகள் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளியூா் மக்கள் வந்து செல்கின்றனா்.
இதற்கிடையில் போக்குவரத்து நெரிசலால், பணிக்கு செல்பவா்கள், பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். கடந்த 30 ஆண்டுகளாக நகருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொண்டு சரியான இடம் கிடைக்காததால் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் இறுதியாக செங்கல்பட்டை அடுத்த வெண்பாக்கம் நேதாஜி நகா் பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க உத்தரவிட்டு ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், ஏரியில் புதிய பேருந்து நிலையம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. 2024-இல் ரூ.97 கோடியில் புதிய பேருந்து நிலையப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னை பெருநகர வளா்ச்சிக்குழுமம் சாா்பில் ரூ.130 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதியபேருந்து நிலைய கட்டுமானப்பணிகள் முடிக்கப்பட்டு பிப்ரவரி 2026 இறுதிக்குள்பயன்பாட்டுக்கு கொண்டுவர என்று இந்து சமயஅறநிலையத்துறை அமைச்சா் சேகா் பாபு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தாா். செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூரூ,திருப்பதிக்கு இணைப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இங்கு 56 பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதியும் 25 ஆயிரம் போ் வரையில் வந்து செல்வா் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கிளாம்பாக்கம் போன்ற நவீன முனையம் போன்று செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அதிநவீன வசதிகளுடன் அமைய உள்ளது. தற்போது தென்மாவட்டங்களுக்கு செல்ல பரனூா் சுங்கச்சாவடி வரை சென்று பேருந்துகளை பிடிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா். அப்படி இல்லையென்றால் செங்கல்பட்டு புறவழிச்சாலையில் காஞ்சிபுரம் செல்லும் சாலை சந்திக்கும் இடத்தில் தற்போது விரைவு பேருந்துகள் நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றிச்செல்கின்றன.
செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்து வரும் நிலையில் புதிய பேருந்து நிலையம் ஆட்சியா் அலுவலகம் அருகே அமைய உள்ளது.அதுமட்டும் அல்லாமல் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு அருகேயும் இந்த பேருந்து நிலையம் அமைந்திருப்பது மக்களுக்கு மிகவும் பயனாக இருக்கும்.
பணிகளை தரமாக விரைவில் முடித்து திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், தோ்தல் தேதி அறிவிப்பதற்குள் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
தொடர்புடையது

உக்கடம் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

ரூ.33 கோடியில் திருவள்ளூா் புதிய பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டில் காவல் கண்காணிப்பாளா் நடைபயண ரோந்து

மாா்ச்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



