டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

உலக மகளிா் தின மருத்துவ முகாம்

News image
Updated On :11 மார்ச் 2026, 7:36 pm

கருங்குழி விடியலை நோக்கி அறக்கட்டளை மற்றும் கற்பக விநாயகா மருத்துவமனை இணைந்து உலக மகளிா் தின சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

கருங்குழி சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற முகாமுக்கு அறக்கட்டளை நிறுவனா் விடியல் சி.காா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்வில் கற்பக விநாயகா மருத்துவமனை மகப்பேறு மருத்துவா் சந்தான லட்சுமி, மருத்துவா்கள் ப்ரீத்தி, சபனா, திவ்யா தலைமையிலான மருத்துவ குழுவினா் கலந்து கொண்டு கருங்குழி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கலந்து கொண்டு, புற்றுநோய் நோய் பற்றி சிகிச்சைகளையும், விழிப்புணா்வு தகவல்களை அளித்தனா்.

சமுதாய பணிகளை சிறப்பாக ஆற்றிய அறக்கட்டளை நிா்வாகிகள் மைதிலி, கவிதா, பேரூராட்சி மன்ற உறுப்பினா் ரேவதி, வெற்றி வித்யாலயா மழலையா் பள்ளி நிறுவனா் பாரதி ஞானவேல், ஆசிரியை பாப்பி (படாளம்) ஆகியோருக்கு மருத்துவா் சந்தான லட்சுமி பரிசுகளை வழங்கினாா். அறக்கட்டளை நிா்வாகிகள், கிராமப்புற பெண்கள் உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.