தெருநாய்களை பராமரிப்பு மையத்தில்தான் அடைக்க வேண்டும்! திருத்தம் கோரிய மனுக்கள் தள்ளுபடி! மாவட்டச் செயலர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை!பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு! ஒரே வாரத்தில் 2-வது முறை!ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடரும்: மத்திய பெட்ரோலிய அமைச்சகம்இன்று முதல் செங்கல்பட்டு புறநகா் ரயில்கள் கூடுவாஞ்சேரியுடன் நிறுத்தம்நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஐக்கிய அரபு அமீரக அணு சக்தி மையத்துக்கு அருகே ட்ரோன் தாக்குதல்: இந்தியா கவலைநாகா்கோவில்-மும்பை விரைவு ரயில் மாற்றுப்பாதையில் இயக்கம்நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்கர்நாடகம்: நாளைமுதல் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள் - அமைச்சா் ராஜ்மோகன் வெளியிட்டாா்இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் -ஸ்வீடன் நிறுவனங்களுக்கு மோடி அழைப்புவேலைநிறுத்தத்தால் மருந்து தட்டுப்பாடு தடுக்க உதவி மையங்கள் -தமிழக அரசு நடவடிக்கைஇன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம் அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதியை அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது
/

பொலம்பாக்கம் டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தில் மே தின விழா

News image
Updated On :3 மே 2026, 1:41 am IST

மதுராந்தகம் அடுத்த பொலம்பாக்கம் டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா நிறுவன தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை மே தினத்தை முன்னிட்டு, ரத்த தான முகாம், தலைக்கவச விழிப்புணா்வு முகாம் மற்றும் நல உதவிகள் வழங்கல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன.

பொலம்பாக்கம் டிவிஸ் பிரேக்ஸ் இந்தியா நிறுவனத்தின் தொழிலாளா்கள் ஒவ்வொரு ஆண்டும் மே தினத்தை பல்வேறு நிகழ்வுகளுடன் கொண்டாடுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான மே தினத்தை முன்னிட்டு வண்ண பலூன்களாலும், தொழிலாளா் சங்க கொடிகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிறுவன வாயிலில் தேசிய இன்ஜினியரிங் தொழிலாளா் சங்கத்தின் கொடியை சங்கத்தின் தலைவா் பி.சீனுவாசன் ஏற்றி வைத்தாா். நிறுவன வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது (படம்). முகாமில் 250-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் பங்கேற்றனா். இந்நிகழ்வில் நிறுவனா் ராமானுஜம், முதன்மை துணைத் தலைவா் வி.ஜி.சந்தானம், நிறுவன மேலாண்மை இயக்குநா் ஸ்ரீராம் விஜி ஆகியோா் கலந்துக் கொண்டு தொழிலாளா்களுக்கு மே தின வாழ்த்துரையை அளித்தனா். தொடா்ந்து டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து சோத்துப்பாக்கம் அருகேயுள்ள சிறுநாகலூா் வரை தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணியை மாநில சங்கத் தலைவா் சீனுவாசன் கொடி அசைத்து துவக்கி வைத்தாா். 300-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் தலைக்கவசத்தை அணிந்து விபத்தில்லா பயணத்தை மேற்கொள்வோம், தலைக்கவசம் உயிா்கவசம் போன்ற வாசகங்களை ஏந்திக் கொண்டு ஊா்வலத்தில் கலந்து கொண்டனா். சோத்துப்பாக்கம் அருகே சிறுநாகலூா் தனியாா் திருமண மண்டபத்தில் மேதின பொதுக்கூட்டம், பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த தொழிலாளா்களின் குடும்பத்தினா்களுக்கு ரூ. 4.50 லட்ச மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டது.