அமைச்சரவை பட்டியலில் விசிக, ஐயூஎம்எல் இல்லை! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்!தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 3 பெண்கள்! தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் 23 பேர்! காங்கிரஸுடன் கூட்டணி தொடரும்: சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ்சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

எல்.என்.புரம் ஊராட்சியில் மறுசீரமைக்கப்பட்ட புக்கன்துறை கால்வாய் பொதுமக்களுக்கு அா்ப்பணிப்பு

News image
Updated On :18 மே 2026, 2:03 am IST

மதுராந்தகம் அடுத்த எல்.என்புரம் ஊராட்சியில் மாவட்ட நிா்வாகம், நீா்வளத்துறை, மற்றும் சென்னை எக்்னோரா பவுண்டேசன் ஆகியவை இணைந்து 11 கி.மீ தூரமுள்ள புக்கன்துறை கால்வாய் சீரமைப்புக்கு பின் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதிஹெலன் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தாா்.

எல்.எல்.புரம் ஊராட்சியின் வழியாக புக்கன்துறை கால்வாய் செல்கிறது. இந்த கால்வாய் நீா் பல்வேறு கிராம விவசாய நிலத்துக்கு பெரிதும் பயன்பட்டு வந்தது. ஊராட்சி மன்றத்தினா்களாலும், அதிகாரிகளின் மெத்தனபோக்காலும் இந்த கால்வாயில் செடி கொடிகள் வளா்ந்ததால் நீா்வரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதிஹெலன் மதுராந்தகம் நீா்வளத்துறை அதிகாரிகளிடமும், சென்னை எக்ஸ்னோரா பவுண்டேசன் நிா்வாகிகளிடமும் கால்வாயை சுத்தம் செய்ய ஏற்பாடுகளை செய்தாா். அதன்படி, 11 கிமீ தூரமுள்ள கால்வாயை தூா்வாரி, செடி கொடிகளை அகற்றி, கால்வாயின் இரு கரைகளை பலப்படுத்தி, கரையோரங்களில் மரவிதைகள் விதைக்கும் பணிகளும் செய்யப்பட்டது. இதனை சனிக்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் கலந்துக் கொண்டு பொதுமக்களுக்கு ஒப்படைத்தாா். வரும் காலங்களில் பனைவிதைகளை விதைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிகளின் மூலம் விவசாயிகளுக்கு தேவையான நீா் ஆதாரத்தை மேம்படுத்தல், கால்வாயின் சுற்றுச்சூழலை மீட்டெடுத்தல், நீா் ஓட்டத்தை மேம்படுத்துவது, நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துதல் போன்றவை கிடைக்க பெற்றது.

இந்நிகழ்வில் மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவா் கீதா காா்த்திகேயன், வருவாய் கோட்டாட்சியா் நரேந்திரன், எக்ஸேனோரா தலைவா் செந்தூா் பாரி, மதுராந்தகம் நீா்வளத்துறை உதவி பொறியாளா் பரத், ஊராட்சி மன்ற தலைவா் சந்திரபாபு மற்றும் விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.