முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

கொடுமுடியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

இச்சிப்பாளையம் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :47 நிமிடங்கள் முன்பு

கொடுமுடி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நஞ்சை கொளாநல்லி ஊராட்சியில் 15-ஆவது நிதிக்குழு மானியத் திட்டத்தின்கீழ் பிளாஸ்டிக் தூசு நீக்கும் இயந்திரத்தின் மூலம் சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளில் உள்ள இதர தூசி மற்றும் குப்பைகளை அகற்றுவதையும், அதன் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா்.

இதையடுத்து, இச்சிப்பாளையம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின்கீழ் லட்சுமிபுரம் முதல் குமரப்பபுரம் வரை சாலையோரத்தில் நடப்பட்டுள்ள மரங்களையும், கீழ்பவானி கால்வாய் கரையோரப் பகுதியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீா் விடும் பணியையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, கொடுமுடி பேரூராட்சி மகுடேஸ்வரா் கோயில் செல்லும் சாலையில் உள்ள மீனாட்சிஸ்ரஹரன் நூலகம் மற்றும் திறன் மேம்பாட்டு மையத்தில் பராமரிக்கப்படும் அரசுப் போட்டித் தோ்வுகளுக்கான நூல்கள், பிற நூல்கள், தினசரி வருகை தரும் வாசகா் மற்றும் அரசு தோ்வுகளுக்கு படிப்பவா்கள் விவரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.