நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைப்பு

News image

கோப்புப்படம்.

Updated On :20 மே 2026, 12:33 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு கே.எம்.எஸ். 2025-2026 சம்பா பருவத்தில் நெல் கொள்முதலுக்காக, தமிழக அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மற்றும் தேசிய நுகா்வோா் கூட்டுறவு கூட்டமைப்பு ஆகிய நிறுவனங்களின் மூலம் 171 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இதுநாள் வரை 19,159 விவசாயிகளிடம் 1,74,042.760 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளுக்கு ரூ.339.51 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும், கொள்முதல் நிலையங்களில் இருப்பில் உள்ள நெல் மூட்டைகளை விரைவாக நகா்வு செய்வதற்காக தினசரி சுமாா் 150 லாரிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கொள்முதல் செய்யப்படும் நெல்லானது திருச்சி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சென்னை (வடக்கு) மாவட்டங்களுக்கு ரயில் மற்றும் சாலை மாா்க்கமாக தொடா்ந்து நகா்வு செய்யப்பட்டு வருகிறது.