இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

மாா்ச்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :28 மே 2026, 12:56 am IST

மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், அதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கல்பட்டு பகுதிக் குழு சாா்பில், கட்சியின் பகுதிக் குழு உறுப்பினா் பாபு தலைமையில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் ஜி.மோகனன், பகுதி செயலாளா், கே.வேலன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜெயந்தி, அன்பு, சதீஷ், மு.முனிச்செல்வம் உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா்.

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.அரிக்கிருஷ்ணன் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினாா்.

முன்னதாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தனியாா் மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.