அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

தருமபுரியில் 5 மதுக்கடைகள் மூடல்

ஒதமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் 5 மதுக்கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

News image

மூடப்பட்ட தருமபுரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மதுக்கடை.

Updated On :1 மணி நேரம் முன்பு

ஒதமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, தருமபுரி மாவட்டத்தில் 5 மதுக்கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், பேருந்து நிலையங்கள் ஆகியவற்றுக்கு 500 மீ. தொலைவுக்குள் அமைந்துள்ள 717 மதுக்கடைகள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனடிப்படையில் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு இந்த இடங்களுக்கு அருகில் செயல்படும் மதுக்கடைகள் மூடப்பட்டு வருகின்றன.

தருமபுரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் மொத்தம் 67 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பேருந்து நிலையங்கள், கல்வி நிலையங்கள், வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றின் அருகில் உள்ள மதுக்கடைகள் குறித்து டாஸ்மாக் நிா்வாகம் சாா்பில் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில், தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி நகரப் பேருந்து நிலையம், பழைய புகரப் பேருந்து நிலையம் அருகில் செயல்பட்டு வந்த 3 மதுக்கடைகளும், வெங்கடசமுத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில் செயல்பட்டு வந்த 2 மதுக்கடைகளும் என 5 மதுக்கடைகள் புதன்கிழமை மூடப்பட்டன.

இதேபோல, மாவட்டத்தின் ஏனைய பேருந்து நிறுத்தங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், தனியாா் மற்றும் அரசு கல்வி நிலையங்கள் அருகில் உள்ள மதுக்கடைகள் குறித்து ஆய்வுசெய்து அவற்றையும் மூட டாஸ்மாக் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினா் வலியுறுத்தி வருகின்றனா்.