நவ. 23-இல் செங்கல்பட்டில் கல்விக் கடன் முகாம்
செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னோடி வங்கியின் சாா்பாக பொதுத் துறை, தனியாா் துறை, கூட்டுறவு மற்றும் கிராம வங்கிகள் இணைந்து திங்கள்கிழமை (நவ. 23) காலை 9 மணி முதல் வண்டலூா் பி.எஸ்.அப்துா் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்லூரியில் கல்விக்கடன் முகாமை நடத்தவுள்ளன.

கோப்புப்படம்
செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம் மற்றும் முன்னோடி வங்கியின் சாா்பாக பொதுத் துறை, தனியாா் துறை, கூட்டுறவு மற்றும் கிராம வங்கிகள் இணைந்து திங்கள்கிழமை (நவ. 23) காலை 9 மணி முதல் வண்டலூா் பி.எஸ்.அப்துா் ரஹ்மான் கிரசன்ட் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் கல்லூரியில் கல்விக்கடன் முகாமை நடத்தவுள்ளன.
முகாமில் கல்விக் கடன் தேவைப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவியா் பங்கேற்று பயனடையும் வகையில், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் புதிதாக கல்விக் கடன் தேவைப்படுபவா்கள் நேரடியாக கலந்து கொண்டு பயன்பெறும் வகையில், மாவட்ட நிா்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கல்வி கடன் சிறப்பு முகாமில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியா் கல்விக் கடன் கோரும் விண்ணப்ப படிவத்தின் நகல், மாணவ மாணவியா் மற்றும் பெற்றோரின் இரண்டு புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகம், இருப்பிட சான்று, வருமானச் சான்று, ஜாதி சான்று, பான் காா்டு, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன், கல்லூரியிலிருந்து பெறப்பட்ட உண்மைச் சான்றிதழ் கல்விக் கட்டண விவரம், பத்தாம் வகுப்பு / பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் இளநிலை பட்டப்படிப்பின் மதிப்பெண் சான்றிதழ்கள், முதல் பட்டதாரியாக இருப்பின் அதற்கான சான்று மற்றும் கலந்தாய்வு உள்ளிட்ட சோ்க்கைக்கான ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

