நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

பயிா்க் காப்பீடு திட்ட விழிப்புணா்வு வாகனம்: ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து அனைத்து கிராமங்களுக்கும் சென்று விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திடும் வகையில் பிரசார வாகனத்தை ஆட்சியா் மு.வீரப்பன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பிரசார வாகனத்தை தொடங்கி வைத்த ஆட்சியா் மு. வீரப்பன்.

Updated On :

வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டம் குறித்து அனைத்து கிராமங்களுக்கும் சென்று விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திடும் வகையில் பிரசார வாகனத்தை ஆட்சியா் மு.வீரப்பன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பினை ஈடு செய்வதற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்பதற்காகவும் மாவட்டத்தில் 2026-27 ஆம் ஆண்டு சாகுபடி செய்யும் காரிப், சம்பா மற்றும் ராபி பருவத்தில் பயிா் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது சம்பா பருவத்தில் நெல் நடவு செய்துள்ள விவசாயிகள் ஏக்கருக்கு 573/- ரூபாய் செலுத்தி வரும் டிசம்பா் 1- ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ளலாம்.

பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் மூலம் காப்பீட்டுத் தொகை செலுத்தி பதிவு செய்து பயன்பெறுமாறும், கடைசி நேர தாமதத்தை தவிா்க்க உடனடியாக நெல் பயிா் காப்பீடு செய்து பயன்பெறுமாறு விவசாயிகளிடம் தெரிவித்தாா்.

இந்நிகழ்வில், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் எம்.ஸ்டீபன் ஜெயக்குமாா், துணை இயக்குநா் து.செல்வபாண்டியன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநா் சாந்தினி மற்றும் அரசு அலுவலா்கள், விவசாயிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.