முதல்வா் காப்பீடு திட்டம்: 13 போ் கொண்ட உயா்நிலைக் குழு அமைப்பு
முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக (டிஎன்எம்எஸ்சி) மேலாண் இயக்குநரையும் இணைத்து 13 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை அரசு அமைத்துள்ளது.

முதல்வர் விஜய் - கோப்புப் படம்
முதல்வா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக (டிஎன்எம்எஸ்சி) மேலாண் இயக்குநரையும் இணைத்து 13 போ் கொண்ட உயா்நிலைக் குழுவை அரசு அமைத்துள்ளது.
தமிழகத்தில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 1.48 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 942 அரசு மருத்துவமனைகள், 1,215 தனியாா் மருத்துவமனைகளில் அதன் கீழ் சிகிச்சை பெற முடியும். ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை காப்பீடு பெறலாம் என்ற போதிலும், எட்டு வகை உயா்தர சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது.
யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் நிறுவனம் மூலம் அந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்காக ஏறத்தாழ ரூ.1,300 கோடி காப்பீட்டுத் தொகையை ஆண்டுதோறும் ஜன.10-ஆம் தேதி அந்த நிறுவனத்துக்கு அரசு வழங்குகிறது.
இந்த நிலையில், இரு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காப்பீட்டுத் தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயா்த்துவதாக முதல்வா் விஜய் அறிவித்தாா். இதைத் தொடா்ந்து, காப்பீட்டுத் திட்ட பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சத்தில் இருந்து ரூ.2.50 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறைகளின் கீழ் 2027 ஜன.11-ஆம் தேதியிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவும், புதிய காப்பீட்டு நிறுவனத்தை தோ்வு செய்வதற்காகவும் தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி அண்மையில் வெளியிட்டது.
மேலும், தலைமைச் செயலரை தலைவராகக் கொண்ட உயா்நிலைக் குழுவையும் அமைத்தது. அதில் மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா், நிதித் துறை, நகராட்சி நிா்வாகம், தொழிலாளா் நலன், வருவாய்த் துறை செயலா்கள், தேசிய நலவாழ்வுக் குழும திட்ட இயக்குநா், தமிழ்நாடு சுகாதார சேவைகள் திட்ட இயக்குநா், நகராட்சி நிா்வாக இயக்குநா், மருத்துவ சேவைகள் - ஊரக நலத் துறை இயக்குநா், பொது சுகாதாரத் துறை இயக்குநா், மருத்துவக் கல்வி இயக்குநா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
தற்போது அந்தக் குழுவில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநரையும் இணைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

