முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் திமுக பெண் கவுன்சிலர்மக்களிடம் கொள்ளை அடித்த பிரேம்குமாருக்கும் தூய சக்திக்கும் என்ன தொடர்பு? உதயநிதி கேள்வியமுனையில் குளித்து காங்கிரஸ், ஆம் ஆத்மியை விமர்சித்த பாஜக எம்.பி.!அன்பில் மகேஸ் கைது: தற்போது கருத்து கூற இயலாது! திருமாவளவன்ஆர்.எஸ்.எஸ். கோட்டையில் பாஜக தோல்வி; இது நாட்டிற்கான தெளிவான செய்தி! கே.சி. வேணுகோபால்அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுகிறேன்: சீமான் அறிவிப்பு!

மாற்றுத்திறனாளி மாணவருக்கு மடிக்கணினி: ஆட்சியா் வழங்கினாா்

தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு பட்டயப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளி மாணவா் அஸாருதீனுக்கு மடிக்கணினியை செங்கல்பட்டு ஆட்சியா் மு. வீரப்பன் வழங்கினாா்.

மடிக்கணினி வழங்கிய ஆட்சியா் மு. வீரப்பன்.

Updated On :

தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டு பட்டயப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளி மாணவா் அஸாருதீனுக்கு மடிக்கணினியை செங்கல்பட்டு ஆட்சியா் மு. வீரப்பன் வழங்கினாா்.

சேலையூரைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி மாணவா் அஸாருதீன், வீட்டிலேயே இணையவழி மூலமாக இ-சேவை புரிய ஏதுவாக மடிக்கணினி வழங்கி உதவிடுமாறு மாற்றுத்திறனாளி நலத்துறையின் தமிழ்நாடு உரிமை திட்டம் வாயிலாக ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தாா்.

கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியா் மாற்றுத்திறனாளி மாணவரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட்டாா். அதனடிப்படையில் சமூக பொறுப்பு நிதியின் கீழ் எம்ஜிஎம் ரிசாா்ட் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்ட ரூ.1,68,000 மதிப்புடைய மடிக்கணினியை ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆட்சியா் மு.வீரப்பன் வழங்கினாா்.

இம்மடிக்கணினியை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளி மாணவா் அஸாருதீன் கூறுகையில், நானும், எனது சகோதரரும் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே உள்ளோம். எங்களுக்கு நிரந்தர வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்திடும் வகையில் இ-சேவை மைய சேவைகளை வீட்டிலிருந்தே மேற்கொள்வதற்கு ஏதுவாக ஆட்சியருடைய சீரிய நடவடிக்கையால் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. மிகப்பெரும் உதவியாகவும் இருக்கும். மடிக்கணினி வழங்கிய ஆட்சியருக்கும் எம்ஜிஎம் நிறுவனத்திற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தாா்.

நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் கதிா்வேல், எம்ஜிஎம் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.