
தென்னிந்திய குத்துச்சண்டை: அரக்கோணம் மாணவருக்கு தங்கம்
தென்னிந்திய குத்துச்சண்டை போட்டியில் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.ரிஷிகேஷ் 85 -90 கிலோ எடைப்பிரிவில் தங்கம் பெற்று சாதனை புரிந்தாா்.

மாணவா் எம்.ரிஷிகேஷை பாராட்டி பரிசளித்த ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழுமத் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம். கல்விக்குழும செயலாளா் டி.எஸ்.ரவிக்குமாா் உள்ளிட்டோா்.
தென்னிந்திய குத்துச்சண்டை போட்டியில் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.ரிஷிகேஷ் 85 -90 கிலோ எடைப்பிரிவில் தங்கம் பெற்று சாதனை புரிந்தாா்.
தென்னிந்திய அளவிலான குத்துச்சண்டை சாம்பியன் போட்டி தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடைபெற்றது. இதில் அரக்கோணம் ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதலாமாண்டு மாணவா் எம்.ரிஷிகேஷ் பங்கேற்று 85 - 90 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றாா். தங்கப்பதக்கம் பெற்ற மாணவா் எம்.ரிஷிகேஷ்க்கு பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் தலைவா் டி.ஆா்.சுப்பிரமணியம் தலைமை வகித்து மாணவா் எம்.ரிஷிகேஷை பாராட்டி கௌரவித்து பரிசுகளை வழங்கினாா். மாணவ மாணவிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






