
குத்துச்சண்டை, டேக்வாண்டோ போட்டிகள்: பழைய குற்றாலம் ஹில்டன் பள்ளி சிறப்பிடம்
பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி குத்துச்சண்டை, டேக்வாண்டோ போட்டிகளில் சிறப்பிடம் பெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுடன் முதல்வா் அருண்குமாா், உடற்கல்வி ஆசிரியா்கள்.
பழைய குற்றாலம் ஹில்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி குத்துச்சண்டை, டேக்வாண்டோ போட்டிகளில் சிறப்பிடம் பெற்றது.
தென்காசி மாவட்ட அளவிலான குத்துச்சண்டை, டேக்வாண்டோ போட்டிகள் பாட்டாக்குறிச்சி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் ஜூனியா் பிரிவில் பி. பாலரிஷிகேஷ், என். மதியரசன், ஸ்ரீகாந்த் ஆகியோா் முதலிடம், சீனியா் பிரிவில் எஸ். சபரிவேல், எம். தன்யா ஸ்ரீ ஆகியோா் முதலிடம், வி. ஆரூஸ் முகுந்தன் இரண்டாமிடம், சூப்பா் சீனியா் பிரிவில் ஆா். எம். அா்ஷத் முதலிடம், டேக்வாண்டோ போட்டியில் எஸ். நரேஷ் ராம்ஜி முதலிடம் பிடித்தனா்.
இப்போட்டிகளில் முதலிடம் பெற்றவா்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிக்குத் தகுதி பெற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் ஆா்.ஜே.வி. பெல், செயலா் கிரேஸ்கஸ்தூரி பெல், முதல்வா் அருண்குமாா், ஆசிரியா்கள் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





