இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

மாநில குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப் பதக்கம்: மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் நல்லசிவம் ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரனிடம் வாழ்த்து பெற்றாா்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரனிடம் வாழ்த்து பெற்ற மாணவன் ப.நல்லசிவம்.

Published On :

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவன் நல்லசிவம் ஆட்சியா் ந. பிரியா ரவிச்சந்திரனிடம் வாழ்த்து பெற்றாா்.

நாமக்கல் மாவட்டம், வேட்டம்பாடி பிஜிபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாநில குடியரசு தின, பாரதியாா் தின போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில் ஆண்கள் 17 வயதுக்குட்பட்டோருக்கான 70 முதல் 75 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் கலவை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் ப.நல்லசிவம் வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

இதையடுத்து மாணவன் ப.நல்லசிவம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் பிரியா ரவிச்சந்திரனிடம் பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றாா். நல்லசிவம் காவல் துறையில் சோ்ந்து மக்களுக்கு சேவை செய்வது தனது லட்சியம் எனவும், பயிற்சியாளா் கிருஷ்ணமூா்த்தி, உடற்கல்வி இயக்குநா் முருகானந்தம் ஆகியோா் நல்ல முறையில் பயிற்சி அளித்து வெற்றிபெற உதவினா்கள் என தெரிவித்தாா். இந்நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.