நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

தீபாவளி நெரிசலை சமாளிக்க லாரி, வேன்களுக்கு அனுமதி அளிக்கப்படுமா?

சென்னை, அக். 11: தீபாவளியை முன்னிட்டு சென்னையைச் சுற்றியுள்ள மாவட்ட பகுதிகளுக்கு பயணிகளை லாரி, வேன்களில் பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.   சென்னையில் இருந்த

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:22 pm

ச. குமரன்

சென்னை, அக். 11: தீபாவளியை முன்னிட்டு சென்னையைச் சுற்றியுள்ள மாவட்ட பகுதிகளுக்கு பயணிகளை லாரி, வேன்களில் பாதுகாப்பாக ஏற்றிச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.

  சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு தினமும் இயக்கப்படும் முக்கிய ரயில்கள் தவிர 48 சிறப்பு ரயில்களை இரு மார்க்கங்களிலும் தெற்கு ரயில்வே இயக்குகிறது. இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகம் ஆகும்.

  இதே போல 1,100 விரைவு பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்த ரயில், பஸ்களில் முன்பதிவு ஏற்கெனவே முடிந்து விட்டது.

  இந் நிலையில், சென்னை சென்ட்ரலில் இருந்து தூத்துக்குடி, ராமேசுவரம், நாகூர் ஆகிய இடங்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் அனைத்தும் பதிவாகிவிட்டன.

  இந்நிலையில், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

  பகல் நேர எக்ஸ்பிரஸ் ரயில்...தீபாவளிக்கு முன்னதாக சென்னை- நாகர்கோவில் இடையே "சேர் கார்கள்' (அமரும் இருக்கைகள் உள்ள பெட்டிகள்) மட்டுமே இணைக்கப்பட்ட பகல் நேர சிறப்பு ரயில் சேவையை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ரயிலில் 2,200 பேர் வரை பயணம் செய்யலாம்.

சிறப்பு பஸ்களாக மாறும் 5,000 "டவுன்' பஸ்கள்...இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவில் தீபாவளி நெரிசல் அதிகரித்துள்ளது.

  இதைச் சமாளிக்கும் வகையில், அரசு போக்குவரத்துக் கழகங்களின் மதுரை, நெல்லை, கும்பகோணம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு கோட்டங்களில் இருந்து சாதாரண வெளியூர் பஸ்கள், டவுன் பஸ்கள் உள்பட சுமார் 5 ஆயிரம் உபரி பஸ்கள் (ஸ்பேர் பஸ்கள்) சென்னையில் இருந்து இயக்கப்பட உள்ளன.

  லாரி, வேன்களுக்கு அனுமதி...சென்னையில் உள்ள பல்வேறு தொழில், வணிக நிறுவனங்கள், துறைமுக சரக்கு முனையங்களில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

  பணியிடங்களில் தீபாவளி நாளுக்கு முந்தைய நாள் இரவு வரை வேலையில் ஈடுபட வேண்டிய நிலையில், இத் தொழிலாளர்களுக்கு பஸ்கள், ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல் இவர்களில் பலர் அவதிப்படுகின்றனர்.

  இதனால், ரயில், பஸ்களுக்கு மாற்றாக தீபாவளிக்கு முன்பும், பின்பும் ஓரிரு நாள்கள் மட்டும் லாரிகள், வேன்களில் பயணிகளை குறைந்த கட்டணத்தில் ஏற்றிச் செல்ல அரசு ஏற்பாடு செய்யலாம்.

30-35 கிலோ மீட்டர் வேகத்தில்தான்...: இதில் பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் இந்த வாகனங்கள் மணிக்கு 30 முதல் 35 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும்.  இதை போலீஸôர் மற்றும் போக்குவரத்துத் துறையினர் இணைந்து கண்காணிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.