பேச்சுவார்த்தை தோல்வி– திருச்சியில் 5-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!

துரந்தர் படத்தின் டீசர், டிரைலரை கட் செய்த ஓஜாஸ் கௌதம் யார் தெரியுமா? யாமி கௌதமின் தம்பி!

துரந்தர் படத்தின் டீசர், டிரைலரை கட் செய்த யாமி கௌதமின் தம்பி ஓஜாஸ் கௌதம் குறித்து...

Dhurandhar film poster. Inside box - Yami gautham and his brother.

துரந்தர் பட போஸ்டர். உள்படம் - யாமி கௌதமியுடன் அவரது தம்பி. - படங்கள்: இன்ஸ்டா / யாமி கௌதம்.

Published On :

துரந்தர் திரைப்படத்தின் டீசர், டிரைலரை கட் செய்தது நடிகை யாமி கௌதமின் தம்பி என இயக்குநர் ஆதித்யா தார் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஆதித்யா தார் நடிகை யாமி கௌதமை கடந்த ஜூன் 4, 2021ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2024ல் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

ஜியோ ஸ்டூடியோஸ் மற்றும் ஆதித்யா தாரின் சொந்த தயாரிப்பு நிறுவனமும் இணைந்து துரந்தர் படத்தினை தயாரித்தார்கள்.

இந்தப் படத்துக்கான கதையை ஆதித்யா தாருடன் இணைந்து ஷிவ்குமார் வி.பணிக்கர், ஓஜாஸ் கௌதம் எழுதியிருந்தார்கள். ஷிவ்குமார் வி.பணிக்கர் படத்தின் எடிட்டராக பணியாற்ற, ஓஜாஸ் கௌதம் படத்தின் டீசர் டிரைலரை கட் செய்தார். இவர் துணை இயக்குநராகப் பணியாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஓஜாஸ் கௌதம்தான் நடிகை யாமி கௌதமின் சகோதரர். 22 வயதான இவர் துரந்தர் படத்தின் டிரைலரை கட் செய்ய 72-76 மணி நேரம் செலவிட்டு காலை 4 மணிவரை தூங்காமல் வேலை செய்ததாக இயக்குநர் ஆதித்யா தார் குறிப்பிட்டார்.

இது குறித்து நடிகர் அர்ஜுன் ராம்பால் கூறியதாவது:

ஓஜாஸ் கௌதமுக்கு 22 வயதுதான். அவர் எனக்கு மிகவும் நெருக்கமானவர். 2020-21 முதல் என்னுடன் இருக்கிறார். அஸ்வத்தாமா படம் உருவாகும் சமயத்தில் இருந்து இருக்கிறார். அவரால்தான் இந்தப் படத்தினை எடுக்க முடிந்தது. அவர் என்னை நம்புவதை விடவே இல்லை எனக் கூறினார்.

சமூக வலைதளங்களில் ஓஜாஸ் கௌதமுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அனைத்து விதமான பாராட்டுகளுக்கும் அவர் தகுதியானவர் என யூடியூப் பக்கத்தில் டிரைலரின் கீழ் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Summary

dhurandhar film trailer cut by yami gautam 22 year old brother Ojas gautham.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.