மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்உருவாகிறது அக்வான் புயல்! வட தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு!சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்துதமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதிதிருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

கௌதம் ராம் கார்த்திக்கின் செங்குலம் படத்தின் போஸ்டர்!

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் செங்குலம் படத்தின் அறிவிப்பு குறித்து...

Gautham Ram Karthik, poster for the film Sengulam

கௌதம் ராம் கார்த்திக், செங்குலம் படத்தின் போஸ்டர் - படங்கள்: எக்ஸ் / கௌதம் ராம் கார்த்திக்

Updated On :

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் செங்குலம் படத்தின் தலைப்பு போஸ்டர் மற்றும் கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.

கண்ணன் ரவி குழுமத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தினை சின்னசாமி பொன்னையா இயக்குகிறார். இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

கண்ணன் ரவி குழுமம் (Kannan Ravi Group) சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘செங்குலம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

கண்ணன் ரவி குழுமம் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களைக் கொண்ட திரைப்படங்களைப் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்து வருவதுடன், புதிய திறமையாளர்களுக்கும் வாய்ப்பளித்து வருகிறது. அந்த வகையில், அறிமுக இயக்குநர் சின்னசாமி பொன்னையா திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

படத்தின் தலைப்பு போஸ்டரில், ரத்தம் தேய்ந்த வேல்கம்பு, அதைச் சுற்றியுள்ள சிவப்பு நிறத் துணிகள் மற்றும் கரிசல்மண், புழுதி, இரத்தம் எனப் படத்தின் ‘செங்குலம்’ என்ற தலைப்புக்கு ஏற்ற வகையில் அதிரடியான தோற்றம் இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து வெளியாகியுள்ள கிளிம்ப்ஸ் வீடியோவில், கரிசல் காட்டின் மண்ணில் ஒரு சிவப்பு நிற வளையல் வைக்கப்பட்டிருக்கிறது. அப்போது ரத்தம் தோய்ந்த வேல்கம்பு ஒன்று வேகமாகப் பாய்ந்து வந்து அந்த வளையலைத் தாக்கி உடைத்துச் சிதறடிக்கிறது. அதைத் தொடர்ந்து, அந்தச் சிதறல்களுக்கு மத்தியில் ‘செங்குலம்’ என்ற படத்தின் தலைப்பு வெடித்துத் தோன்றுகிறது.

இப்படத்திற்கு  கிஃப்ட்சன் ராபர்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். R. மோகன் மற்றும் வைர பாலன் கலை இயக்குநர்களாகப் பணியாற்றியுள்ளனர். தமிழ் அரசன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்க, ஹெட் ஆப் ஆப்ரேஷன்ஸ் ஆக ஶ்ரீநாத் விஸ்வநாதன் பணியாற்றுகிறார். மகேஷ் மேத்யூ சண்டைப் பயிற்சி இயக்குநராகவும், மோனிக் போஸ்டர் வடிவமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், காஷ்மீரிலும் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் , இந்தி என பான் இந்திய மொழிகளில் இப்படம் 2027ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக கௌதம் மிஸ்டர் எக்ஸ் என்ற படத்தில் நடித்திருந்தார். இதற்கடுத்து மூன்று புதிய படங்களில் நடித்து வருகிறார். அடுத்தாண்டு இந்தப் படங்கள் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Poster for the film 'Sengulam', starring Gautham Ram Karthik!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER