மேக்கேதாட்டு: யார் வேண்டுமானாலும் கண்டனம் தெரிவிக்கட்டும், கவலையில்லை! டி.கே. சிவகுமார் பதில்உருவாகிறது அக்வான் புயல்! வட தமிழகத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு!சுகாதாரத் தரவுகள் நிறுத்தம்! உண்மையை மறைப்பது ஒருபோதும் தீர்வாகாது - தமிழச்சி கருத்துதமிழக முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கடிதம்வெற்றி வானில் உலாவரச் செய்வோம்: குழந்தைகள் நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!தமிழக அரசின் வங்கிக் கணக்கில் ரூ.22 கோடி மோசடி: 7 பேர் கைது! திரைப்பட பாணியில் ஒரு சம்பவம்விரைவு ரயில்களின் இருக்கை நீல நிறத்தில் இருக்க இத்தனை காரணங்களா?அமெரிக்கா முழுவதும் விமான சேவைகள் பாதிப்பு! பயணிகள் அவதிதிருச்செந்தூரில் நாளை (நவ. 15) சூரசம்ஹாரம்ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வுசபரிமலை பக்தா்களுக்கு தமிழகம் வழியாக சிறப்பு ரயில்கள்இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி அக்டோபரில் 45% அதிகரிப்பு: 5 ஆண்டுகளில் இல்லாத வளா்ச்சிவங்கக் கடலில் நவ.16-இல் உருவாகிறது ‘அக்வான்’ புயல்: ஆந்திரத்தை நோக்கி நகரும்?

காளிதாஸ் ஜெயராமின் புதிய படத்தின் ரிலீஸ் தேதி!

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் குறித்து...

Poster for Kalidas Jayaram's new film

காளிதாஸ் ஜெயராமின் புதிய படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / ரோமியோ பிக்சர்ஸ்

Updated On :

நடிகர் காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள ’மெனி மெனி ஹாப்பி ரிடர்ன்ஸ்’ என்ற புதிய திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அஹ்மது கபிர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் காளிதாஸ் ஜெயராம் நாயகனாகவும் லக்‌ஷ்மி ஜோதிஷ் நாயகியகாவும் நடித்துள்ளார்கள்.

மங்கி பிஸினஸ் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இந்தப் படத்தை ரோமியோ பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

இந்தப் படம் காதல், நட்பு, குடும்ப உறவுகள் தொடர்பாக உருவாகியுள்ளது. ரொமான்டிக் நகைச்சுவை கலந்த காதல் படமாக இருக்குமென படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம் உடன் லக்‌ஷ்மி ஜோதிஷ், போபண்ணா அலுமூடன் சஞ்சு சானிசென், சோசம்மா, ரெஜித் சேகர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்துக்கான திரைக்கதையை ஜாபின் ஜான் உடன் இணைந்து அஹ்மது கபிர் எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்து வருகிறார்.

முன்னதாக அஹ்மது கபிர் ஜூன் (2019), மதுரம் (2021) ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கேரள க்ரைம் ஃபைல்ஸ் என்ற இணையத் தொடடின் முதலிரண்டு சீசன்களையும் அவர் இயக்கியுள்ளார்.

இந்தப் படம் தமிழ் மற்றும் மலையாளத்தில் வரும் டிச.4ஆம் தேதி வெளியாக இருக்கிறது. கடைசியாக காளிதாஸ் ஜெயராம் ராயன் படத்திலும் ஆஷாகல் ஆயிரம் படத்திலும் நடித்திருந்தார்.

Summary

Kalidas Jayaram’s ‘Many Many Happy Returns’ to Release on December 4!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.