மெருகேற்றம், மாற்றம் வேண்டாம்..! ஊடகங்களிடம் வேண்டுகோள் விடுத்த யாமி கௌதம்!
பாலிவுட் நடிகை யாமி கௌதம் பகிர்ந்த இன்ஸ்டா பதிவு குறித்து...

யாமி கௌதமின் புதிய பட போஸ்டர் - படம்: இன்ஸ்டா / யாமி கௌதம்
பாலிவுட் நடிகை யாமி கௌதம் தனது இன்ஸ்டா பதிவில் ஊடகங்களிடம், “என்னுடைய படத்தை ஏஐ மூலம் மெருகேற்றம் அல்லது மாற்றம் செய்ய வேண்டாம்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகை யாமி கௌதம் தமிழில் கௌரவம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். தற்போது, ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதையும் பெற்றார்.
துரந்தர் படத்தின் இயக்குநரை மணந்த யாமி கௌதம் பாலிவுட்டில் தனக்கென புதிய ரசிகர்களை உருவாக்கியுள்ளார். அவரது ஆர்டிகிள் 370, முத்தலாக் பற்றிய படங்கள் மிகுந்த சர்ச்சையையும் வரவேற்பையும் பெற்றன.
யாமி கௌதம் நடிப்பில் ’நையி நவெல்லி' என்ற ஃபேன்டஸி திரைப்படம் வரும் அக்.16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மோகினியாக நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் டிரைலர் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் ஜான்வி கபூர் புகைப்படத்தை எடிட் செய்து பரப்பி வந்தவர்களை ஜூனியர் என்டிஆர் கடுமையாக கண்டித்திருந்தார். இந்த நிலையில், யாமி கௌதம் இன்ஸ்டாவில் கூறியிருப்பதாவது:
ஊடகங்களுக்கு மனமார்ந்த ஒரு வேண்டுகோள்
நான் பொதுவெளியில் பங்கேற்கும் புகைப்படங்களை ஏஐ மூலம் மெருகேற்றம் அல்லது மாற்றம் எதுவும் செய்ய வேண்டும். அதன் உண்மைத் தன்மையில் அசலான புகைப்படத்தையே பயன்படுத்துங்கள்.
ஏஐ மூலம் ஒருவரது தனிப்பட்ட புகைப்படங்களை அவர்களது சம்மதம் இல்லாமல் மாற்றக்கூடாது. எனது அறிவுரையை ஏற்பீர்களென நம்புகிறேன். அதற்காக இப்போதே நன்றி எனக் கூறியுள்ளார்.

யாமி கௌதம் பதிவு - படம்: இன்ஸ்டா / யாமி கௌதம்
Summary
“Use images in original form”: Yami Gautam asks media not to “alter or enhance” her pics using AI
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






