கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்புமதுரை நகைக்கடை திருட்டு! ஸ்கூட்டியில் வந்த திருடன்.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!பாகிஸ்தான் உளவாளியின் ஒரு படத்துக்கு ஒரு ரகசிய ஆவணம் பகிர்ந்த விமானப் படை அதிகாரி!ரயில்வே படுக்கை விரிப்பு காகித உறைகளில் மீண்டும் காணாமல்போன தமிழ்!அயலக உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் தாமதம் இல்லை! அரசு விளக்கம்விவாதத்திற்கு மோடி வரட்டும்; உண்மையான தேச விரோதி யார் என்று காட்டுகிறேன்! ராகுல்பெங்களூர் இளஞ்சிவப்பு மெட்ரோ வழித்தடத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!அதிவேகமாகப் பரவி வரும் புதிய வகை கரோனா! இப்படி ஒரு அறிகுறியா?ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்!நவ.16ல் உருவாகிறது அக்வான் புயல்!தமிழகம் முழுவதும் நூலகங்களில் இருந்து 70,674 போலி நூல்கள் அகற்றம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அமித் ஷாவிடம் அறிக்கை அளித்தார் தமிழக ஆளுநர் ஆர்லேகர்!

ரன்கள் குவிக்காதது கவலையளிக்கவில்லை, ஆனால்.... தோல்விக்குப் பின் கௌதம் கம்பீர் பேசியதென்ன?

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

GAUTAM GAMBHIR

கௌதம் கம்பீர் - ICC

Updated On :

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட மோசமான தோல்வி குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி பே ஓவலில் இன்று (நவம்பர் 13) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி 244 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, வெறும் 89 ரன்களுக்கு ஆட்டமிழந்து மிகவும் மோசமான தோல்வியைத் தழுவியது.

இந்த நிலையில், இந்திய அணியின் மோசமான தோல்வி கவலையை ஏற்படுத்துவதாக உள்ளதாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் போட்டி நிறைவடைந்த பிறகு பேசியதாவது: 90 ரன்களுக்குள் ஆட்டமிழப்பதை நினைத்து கவலையடையாமல் இருக்க முடியவில்லை. இதுபோன்ற ஆடுகளங்களில்தான் நாங்கள் எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் விளையாடவுள்ளோம். அதனால், இந்தத் தோல்வி எனக்கு சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது.

என்னுடைய மிகப் பெரிய கவலை இந்திய அணி ரன்கள் குவிக்காதது கிடையாது. அணியில் உள்ள அனைத்து வீரர்களும் 26 அல்லது 27 ஓவர்களில் ஆட்டமிழந்ததுதான் எனக்கு மிகவும் கவலையளித்தது. இந்த விஷயம்தான் எனக்கு எப்போதும் கவலையளிப்பதாக உள்ளது. முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழக்காமல் 35 அல்லது 40 ரன்கள் எடுத்தால் போதுமானது. ஆனால், நாங்கள் குறுகிய இடைவெளியில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம்.

மாட் ஹென்றி அபாரமாக பந்துவீசினார். அவர் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் தொடர்ச்சியாக ஸ்டம்புகளையும், பேடுகளையும் குறிவைத்து சிறப்பாக பந்துவீசினார். இதனை நாம் அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஃபீல்டிங்கில் நாம் கேட்ச்சுகளை தவறவிட்டோம். அதனால், அதற்கான விலையைக் கொடுத்துள்ளோம் என்றார்.

Summary

Indian team head coach Gautam Gambhir has spoken about the crushing defeat in the fourth ODI against New Zealand.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.