டி20 அணியின் வெற்றியை ஒருநாள், டெஸ்ட் அணிகளும் தொடர வேண்டும்: கௌதம் கம்பீர்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான அடித்தளத்தை டி20 தொடருக்கான இந்திய அணி அமைத்துக் கொடுத்துள்ளதாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் - படம் | பிசிசிஐ
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான அடித்தளத்தை டி20 தொடருக்கான இந்திய அணி அமைத்துக் கொடுத்துள்ளதாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான அடித்தளத்தை டி20 தொடருக்கான இந்திய அணி அமைத்துக் கொடுத்துள்ளதாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ð£ï¸ ðð¤ðª ððªð®ð¨ ððð«ð ð¨ðð© ð©ðð ð©ð¤ð£ð ðð¤ð§ ð©ðð ð§ðð¨ð© ð¤ð ð©ðð ð©ð¤ðªð§. ð
— BCCI (@BCCI) November 2, 2026
ð¥ Inside the #TeamIndia dressing room as our Head Coach @GautamGambhir praises a commendable series-winning effort ð
ð½ WATCH | #NZvIND https://t.co/eShVMaPRJa
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டதை நினைத்து வீரர்கள் அனைவரும் மிகவும் பெருமிதம் கொள்ளலாம். நியூசிலாந்து அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் தொடரை வென்று கொடுத்துள்ளீர்கள். அதிலும் குறிப்பாக, போட்டிகளுக்கு தயாராக ஒருநாள் மட்டுமே இடைவெளி இருந்தும் இதனை சாதித்துள்ளீர்கள். தொடரின் கடைசி இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கொடுக்க வேண்டும் என நீங்கள் நினைத்தீர்கள். ஆனால், சில நேரங்களில் இதுபோன்று நடப்பது இயல்பானது.
ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ள அணிக்கு டி20 தொடரை வென்று கொடுத்து அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளீர்கள். டி20 தொடர் தொடங்கும் முன்பு, தொடரை வென்று கொடுத்து நேர்மறையான எண்ணத்துடன் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்குள் அணி நுழைவதை உறுதி செய்வது உங்களது பொறுப்பு எனக் கூறினேன். அதனை நிறைவேற்றியுள்ளீர்கள். நீங்கள் கொடுத்துள்ள வெற்றியைத் தொடரும் பொறுப்பு தற்போது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கும், டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கும் உள்ளது என்றார்.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் நாளை மறுநாள் (நவம்பர் 4) தொடங்கும் நிலையில், டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
Summary
Head coach Gautam Gambhir has stated that the Indian T20 squad has laid the foundation for the upcoming ODI and Test series against New Zealand.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


