காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

டி20 போட்டியில் இந்திய அணி விரைவில் 300 ரன்கள் குவிக்கும்: கௌதம் கம்பீர்

டி20 வடிவிலான போட்டியில் இந்திய அணி விரைவில் 300 ரன்கள் குவிக்கும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

gautam gambhir

கௌதம் கம்பீர் (கோப்புப் படம்)

Published On :

டி20 வடிவிலான போட்டியில் இந்திய அணி விரைவில் 300 ரன்கள் குவிக்கும் என இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (செப்டம்பர் 17) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 127 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றியது.

இந்த நிலையில், டி20 போட்டியில் 300 ரன்கள் குவிக்கும் அளவுக்கு நம்பமுடியாத அளவுக்கு திறமைவாய்ந்த வீரர்கள் இந்திய அணியில் இருப்பதாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணிக்கான மிகப் பெரிய நேர்மறையான விஷயம் என்னவென்றால், பவர்பிளேவில் 100 ரன்கள் எடுத்தது. என்னுடைய தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பில் இந்திய அணி முதல் முறையாக பவர்பிளேவில் 100 ரன்கள் குவித்துள்ளது. அதனால், நாங்கள் அதிரடியாக விளையாடப் போகிறோம் என்பதில் வீரர்கள் தெளிவாக இருக்கிறார்கள்.

இனிவரும் போட்டிகளிலும் இதுபோன்று அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க உள்ளோம். நாங்கள் இதுவரை 300 ரன்கள் குவித்ததில்லை. அதனால் எங்களது அடுத்த இலக்கு அதுவாகத்தான் இருக்கும். 300 ரன்கள் குவிக்கும் அளவுக்கு திறமையான வீரர்கள் அணியில் உள்ளார்கள். இந்திய அணி விரைவில் 300 ரன்கள் குவிக்கும் என்றார்.

டி20 போட்டிகளில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 297 ஆகும். கடந்த 2024 ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 297 ரன்கள் எடுத்தது. அதன் பின், அதே ஆண்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 283 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian team head coach Gautam Gambhir has stated that the Indian team will soon score 300 runs in a T20 match.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER